அனுடின் சார்ன் விராகுல் மீண்டும் தாய்லாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். . 

by Admin / 20-03-2026 06:01:42am
 அனுடின் சார்ன் விராகுல் மீண்டும் தாய்லாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். . 

நேற்று தாய்லாந்து நாடாளுமன்ற பொதுத்தேர்தல்  வாக்கெடுப்பில், அனுடின் சார்ன் விராகுல் அவரது பூம்ஜாய் தாய் கட்சி சிறப்பான வெற்றியைப் பெற்று மீண்டும் தாய்லாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். .  நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அனுடின் 293 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரது முக்கியப் போட்டியாளரான மக்கள் கட்சியின் நத்தபோங் ருயேங்பான்யாவத்119 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

தாய்லாந்து பிரதமராகத் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் இவராவார்.தொழிலதிபரான அனுடின், முன்னதாக ,செப்டம்பர் 2025-இல் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு துணைப் பிரதமர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

கம்போடியாவுடனான எல்லை மோதல்கள் மற்றும் முந்தைய பிரதமரான பேடோங்டர்ன் ஷினவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு, அனுடின் தனது செல்வாக்கை வலுப்படுத்திக் கொண்டார். 

 

Tags :

Share via

More stories

Logo