டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

by Editor / 21-08-2022 02:50:20pm
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்


 டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது மதுபான கடை உரிமம் வழங்க முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சரும் காலால்  துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ நேற்று முன்தினம் மணீஷ் சிசோடியாவின் இல்லம் அலுவலகம் உள்ளிட்ட 37 இடங்களில் சோதனை நடத்தி முக்கியமான இமெயில்கள் கணினி ஆவணங்களை கைப்பற்றினர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் உள்பட 13 பேர் வெளிநாட்டுக்கு தப்ப முடியாத வகையில் விமான நிலையங்களுக்கு சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனடியில் சிபிஐ சோதனைகளில் எதுவும் கிடைக்காத நிலையில் தனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என கேள்வி எழுப்பிய சிசோடியா டெல்லியில்தான் சுதந்திரமாக சுற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo