கோலாகலமாக தொடங்கியது வேளாங்கண்ணி ஆலய திருவிழா.

by Staff / 30-08-2024 12:34:06pm
கோலாகலமாக தொடங்கியது வேளாங்கண்ணி ஆலய திருவிழா.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலகப் புகழ்பெற்ற கிறிஸ்தவ பேராலயங்களில் ஒன்றாகும். இது ‘கீழை நாடுகளின் லூர்து’ என போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். நேற்று (ஆக.30) மாலை ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடியேற்றப்பட்டது.

 

Tags :

Share via