வைரமுத்துவுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து

by Staff / 13-07-2023 12:36:05pm
வைரமுத்துவுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து

கவிஞர் வைரமுத்து இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே! உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்'' என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo