ஜோதிடம் பலிக்காததால் ஆத்திரம் ஜோதிடருக்கு அரிவாள் வெட்டு.

by Editor / 04-05-2025 09:07:16pm
ஜோதிடம் பலிக்காததால் ஆத்திரம் ஜோதிடருக்கு அரிவாள் வெட்டு.

நெல்லை டவுனை சேர்ந்த மணிகண்டன் என்ற ஜோதிடர், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தைச் சேர்ந்த மலையாண்டி என்பவரின் வருங்காலத்தைக் கணித்து ஜோதிடம் சொல்லியுள்ளார். ஆனால், அவரது ஜோதிடம் பலிக்காததால் ஆத்திரம் அடைந்த மலையாண்டி, ஜோதிடர் மணிகண்டனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டார். காயமடைந்த ஜோதிடரை  அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags : ஜோதிடம் பலிக்காததால் ஆத்திரம் ஜோதிடருக்கு அரிவாள் வெட்டு.

Share via