இந்தியாவின் மொத்த ஜி.எஸ்.டி வசூல் வருவாய் 8.8 சதவீதம் அதிகரித்து 2 லட்சம் கோடியை தாண்டிஉள்ளது

by Admin / 02-04-2026 09:06:34am
இந்தியாவின் மொத்த ஜி.எஸ்.டி வசூல் வருவாய் 8.8 சதவீதம் அதிகரித்து 2 லட்சம் கோடியை தாண்டிஉள்ளது

இந்தியாவின் மொத்த ஜி.எஸ்.டி வசூல் வருவாய் 8.8 சதவீதம் அதிகரித்து 2 லட்சம் கோடியை தாண்டி புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி மார்ச் 2026-ல் மொத்த வசூல் ஆன தொகை 2,00 064 கோடி ஆகும். இது கடந்த அண்டு மார்ச் மாத வசூல் ஆன 1. 83 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 8.8 சதவீதம் அதிகமாகும். உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த வருவாய் 5.9% உயர்ந்து 1.46 லட்சம் கோடியாக உள்ளது. இறக்குமதி மூலம் வசூரான ஜிஎஸ்டி 17.8 சதவீதம் அதிகரித்து 53, 861 கோடியாக உயர்ந்துள்ளது. 2025-26 நிதியாண்டில் மொத்த வசூல் ஜிஎஸ்டி வருவாய் 22.27 லட்சம் கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளது இது முந்தைய ஆண்டை விட 8. 3 சதவீதம் அதிகமாகும். ரீ ஃபைண்டுகள் வழங்கப்பட்ட பிறகு மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் 1.78 லட்சம் கோடியாக உள்ளது.

 

Tags :

Share via
Logo