3-குழந்தைகள் 4-பெண்கள் உட்பட 17-பேருக்கு வாந்தி மயக்கம்.

by Editor / 24-03-2025 11:05:01am
3-குழந்தைகள் 4-பெண்கள் உட்பட 17-பேருக்கு வாந்தி மயக்கம்.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் சனிக்கிழமை மதியம் நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் லியாகத் ஹோட்டலில் மந்தி பிரியாணி மற்றும் சிக்கன் ஆர்டர் செய்துள்ளார்.ஆர்டர் செய்த 20-மந்தி பிரியாணி மற்றும் சிக்கனை வீட்டிற்கு கொண்டு வந்தவர் குடும்பத்தினர் 20-பேருக்கு கொடுத்து சாப்பிட்டுள்ளார் பிரியாணியை சாப்பிட்ட ஒவ்வொருவருக்கும் சாப்பிட்ட சில மணி நேரத்தில் வாந்தி வயிற்று போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனால் அவர்கள்  அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிட்சை பெற்ற நிலையில் 
ஞாயிற்றுகிழமை மாலை 3-குழந்தைகள் 4-பெண்கள் உட்பட 17-பேருக்கு தொடர்ந்து வாந்தி மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் குளச்சல் தனியார் மருத்துவமனையில் 15-பேரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2-பேரும் என 17-பேர் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் 
இதில் இரண்டு குழந்தைகள் தீவிர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புகாரின் அடிப்படையில் மணவாளக்குறிச்சி போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

Tags : 3-குழந்தைகள் 4-பெண்கள் உட்பட 17-பேருக்கு வாந்தி மயக்கம்.

Share via