சிறுமி பாலியல் பலாத்காரம்

அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவரை 40 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். திங்கள்கிழமையன்று அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் இறந்த 24 மணி நேரத்தில் அவரது குழந்தையும் கொல்லப்பட்டது. இவர்களது மரணத்திற்கு, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரே காரணம் என சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்டவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Tags :