கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை இறக்கினால், ஐந்து ஆண்டு சிறை தண்டனை.

by Editor / 02-06-2023 09:30:38am
 கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை இறக்கினால், ஐந்து ஆண்டு சிறை தண்டனை.

துாய்மை பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வு கூட்டம் சென்னையில் உள்ள குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது. அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை இறக்கினால், ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறியுள்ளார்.மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 பிரிவு 7-இன் படி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் சட்டப்படி நடிவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via