அமித் ஷாவின் கான்வாய் மீது மோதிய கார்

by Staff / 09-03-2023 01:40:16pm
அமித் ஷாவின் கான்வாய் மீது மோதிய கார்

திரிபுரா மாநிலத்திற்கு சென்றுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வாகனங்கள் மீது கார் மோதியது பரபரப்பை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் கான்வாய் நேற்று மாலை விருந்தினர் மாளிகையில் இருந்து அகர்தலா விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வழக்கமான போக்குவரத்தை அதிகாரிகள் நிறுத்தினர். ஒரு நபர் தனது காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். போலீசார் தடுக்க முயன்றும் அவர் நிற்கவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்தால் விபத்து ஏதும் ஏற்படவில்லை என தெரிகிறது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via