நடிகர் தனுஷிற்கு படத்திற்காக வாங்கிய முன்பணத்தை திருப்பி தராததால் தேனாண்டாள் பிலிம்ஸ் சட்டப்பூர்வ நோட்டீஸ்
நடிகர் தனுஷிற்கு படத்திற்காக வாங்கிய முன்பணத்தை திருப்பி தராததால் தேனாண்டாள் பிலிம்ஸ் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2016 ஆம் ஆண்டு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக நான் ருத்ரன் என்னும் திரைப்படத்தில் நடிக்கவும் இயக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு நீண்ட காலமாக படம் தொடங்கப்படாமல் முடங்கி இருப்பதின் காரணமாக சட்டபூர்வமாக தனுஷிற்கு நஷ்ட ஈடு ரூபாய் 20 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது .பத்து ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தனுஷ் பணத்தை தொடங்கவில்லை என்றும் இதற்கிடையில் அவர் மற்ற படங்களுக்கு கால்சீட் கொடுத்ததால் தங்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளதோடு அடுத்த ஒரு வாரத்திற்குள் பணத்திற்கான கால்ஷீட் தேதிகளை ஒதுக்க வேண்டும். இல்லையெனில் அட்வான்ஸ் தொகையுடன் 20 கோடி மற்றும் கூடுதல் செலவிற்கான ஒரு கோடி என மொத்தம் 21 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிட்டு அனுப்பி உள்ளது. இந்தப் படத்திற்காக நடிகர் நாகார்ஜுனா மற்றும் எஸ். ஏ சூர்யா போன்றோருக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லாததால் தனக்கு தர வேண்டிய பணத்தை அவர் உரிய வட்டியோடு வழங்கப்பட வேண்டும் என்று பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags :



















