விஜய் அரசியலில் அனுபவம் இல்லாதவர். திரிஷாவிடமிருந்து முதலில் வெளியே வந்தால் தான், எல்லாமே நடக்கும்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தற்பொழுது பெரும் சர்ச்சையாக கிளம்பியுள்ளது. நேற்று சேலத்தில் நடந்த த.வெ.க பொதுக்கூட்டத்தில் விஜய் உரையாற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜய் அரசியலில் அனுபவம் இல்லாதவர் .அவர் முதலில் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும். திரிஷாவிடம் இருந்து முதலில் வெளியே வந்தால் தான், எல்லாமே நடக்கும். குடும்பத்தோடு நல்ல உறவு வைக்க வேண்டும் என தனிப்பட்ட முறையில் விமர்சித்ததோடு விஜயால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். .இந்த கருத்து பெண் அடிமைத்தனமாகவும் அநாகரிகமான அரசியல் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் கிளம்பின. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் அரசியலில் தொடர்பு இல்லாத ஒரு பெண்ணின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேசியது நாகரீகமற்ற செயல் என கண்டித்துள்ளனர். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நயினார் நாகேந்திரன் உருபொம்மையை எரித்தும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை வைத்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். டி.டி.வி தினகரன், நாஞ்சில் சம்பத், நிர்மல் குமார் போன்றோரும் இது போன்ற தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :


















