தென்இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

by Editor / 17-12-2023 11:23:49am
தென்இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

     

17.12.2023: தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு  30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை  பெய்யக்கூடும்.

18.12.2023: தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

19.12.2023: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

20.12.2023 முதல் 22.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):    மண்டலம் 12 
மாமல்லபுரம் பொதுப்பணித்துறை பங்களா (செங்கல்பட்டு) 5,

மண்டலம் 12 மீனம்பாக்கம் (சென்னை) 4, 

ஜெயம்கொண்டம் (அரியலூர்),கொள்ளிடம் (மயிலாடுதுறை), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), வந்தவாசி (திருவண்ணாமலை) தலா 3, 

மணல்மேடு (மயிலாடுதுறை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), புவனகிரி (கடலூர்), மண்டலம் 12 D156 முகலிவாக்கம் (சென்னை), மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), காட்டுமன்னார் கோயில் (கடலூர்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு) தலா 2, 

அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), மண்டலம் 14 பெருங்குடி (சென்னை), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), பரங்கிப்பேட்டை (கடலூர்), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), சென்னை விமானநிலையம்  (சென்னை), ஆலந்தூர் (சென்னை), வளசரவாக்கம் (சென்னை), மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), சென்னை (N) AWS (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை), மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை), மணலி (சென்னை), மண்டலம் 02 மணலி (சென்னை), கொளப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), மண்டலம் 03 புழல் (சென்னை), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), சீர்காழி (மயிலாடுதுறை), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), செய்யார் (திருவண்ணாமலை), நாலுமுக்கு (திருநெல்வேலி), மண்டலம் 13 U39 அடையார் (சென்னை), திரு.வி.க நகர் (சென்னை), பெரம்பூர் (சென்னை), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), கொத்தவாச்சேரி (கடலூர்), ஆவடி (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), YMCA நந்தனம் ARG (சென்னை), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), அம்பத்தூர் (சென்னை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), ஊத்து (திருநெல்வேலி), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), திருப்போரூர் (செங்கல்பட்டு), காரைக்கால் (காரைக்கால்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), கொரட்டூர் (திருவள்ளூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), தண்டையார்பேட்டை (சென்னை), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), டிஜிபி அலுவலகம் (சென்னை) தலா 1.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்: 
16.12.2023 முதல் 19.12.2023 வரை: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

அரபிக்கடல் பகுதிகள்: 
16.12.2023: தென்கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17.12.2023: தென்கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
18.12.2023, 19.12.2023: தென்கேரள கடலோரப்பகுதிகள் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் மாலதீவு-லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். 
மேலும் விவரங்களுக்கு:  mausam.imd.gov.in/chennai   இணையதளத்தை காணவும்.
பா. செந்தாமரை கண்ணன்
     இயக்குனர்
     தென் மண்டல தலைவருக்காக
     மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னை

 

Tags : தென்இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

Share via