திருவண்ணாமலை கனமழையின் போது இடி தாக்கி குடிசை வீட்டில் தீ விபத்து.

by Staff / 08-09-2025 09:57:34am
திருவண்ணாமலை கனமழையின் போது இடி தாக்கி குடிசை வீட்டில் தீ விபத்து.

திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு  இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை அடுத்த மேல்அத்திக்காண் கிராமம்  எம்ஜிஆர் நகர் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் நேற்று இரவு பெய்த கன மழையின் போது இடிதாக்கியதில் குடிசையில் தீ பற்றியதாக சொல்லப்படும் நிலையில் தீ விபத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட  ஆடுகளுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு ஆட்டுக்கு அதிக அளவில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும் குடிசை வீடு முற்றிலும் சேதம் அடைந்து, பாலகிருஷ்ணன் மகள் முனியம்மாளுக்கும்  இடி தாக்கியதில் கையில் வலி மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டு காயமடைந்து உயிர் தப்பியுள்ளார்.

தொடர்ந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு தற்போது வீட்டிற்கு வந்துள்ளார்.
 

 

Tags : திருவண்ணாமலை கனமழையின் போது இடி தாக்கி குடிசை வீட்டில் தீ விபத்து.

Share via