சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதிகள் உள் மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. .கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட சில பகுதிகளுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.. சென்னையை பொருத்தமட்டில் நாள் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தீபாவளியின் காரணமாக காற்றின் மாசு மழையின் காரணமாக கட்டுப்படுத்தப்படலாம் என்கிற கருத்து உருவாகி உள்ளது.. சென்னையின் வார இறுதியில் இடியுடன் கூடிய மழை தொடரும் என்றும் அக்டோபர் 27 திங்கட்கிழமை அன்று பலத்த மழை பெய்யும் என்றும் தகவல்..
Tags :


















