ராசி பலன்கள்.22.03.2022

by Editor / 22-03-2022 06:12:46am
ராசி பலன்கள்.22.03.2022

மேஷம்
மார்ச் 22, 2022


குடும்பத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் நுணுக்கமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பு மேம்படும்.

பரணி : அறிமுகங்கள் கிடைக்கும்.

கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள்.
---------------------------------------


ரிஷபம்
மார்ச் 22, 2022


எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவி கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். ஆதரவான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : உதவி கிடைக்கும்.

ரோகிணி : லாபகரமான நாள்.

மிருகசீரிஷம் : புத்துணர்ச்சி ஏற்படும்.
---------------------------------------


மிதுனம்
மார்ச் 22, 2022


நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசு தொடர்பான அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். வாழ்க்கை துணைவர் வழியில் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடர்பான சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை : காரியங்கள் நிறைவேறும்.

புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
---------------------------------------


கடகம்
மார்ச் 22, 2022


மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வியாபார பணிகளில் மந்தமான சூழல் ஏற்படும். குழந்தைகளின் உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

புனர்பூசம் : மந்தமான நாள்.

பூசம் : முடிவு கிடைக்கும்.

ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------


சிம்மம்
மார்ச் 22, 2022


வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் எண்ணிய முடிவு கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மகம் : சாதகமான நாள்.

பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.
---------------------------------------


கன்னி
மார்ச் 22, 2022


உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சிறு சிறு பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

அஸ்தம் : எதிர்ப்புகள் குறையும்.

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------

துலாம்
மார்ச் 22, 2022


மாணவர்களுக்கு பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு அலைச்சலுக்கு பின்பு கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோக பணிகளில் எண்ணிய பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்படும். மதிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

சுவாதி : மாற்றமான நாள்.

விசாகம் : காலதாமதம் ஏற்படும்.
---------------------------------------


விருச்சிகம்
மார்ச் 22, 2022


குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : அனுசரித்து செல்லவும்.

அனுஷம் : அனுபவங்கள் கிடைக்கும்.

கேட்டை : ஏற்ற, இறக்கமான நாள்.
---------------------------------------

தனுசு
மார்ச் 22, 2022


குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் அமைதியும், நிம்மதியும் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சூழல் காணப்படும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விருப்பம் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

மூலம் : நிம்மதி ஏற்படும்.

பூராடம் : உயர்வான நாள்.

உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------

மகரம்
மார்ச் 22, 2022


செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் குறையும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் அனுகூலம் உண்டாகும். பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் அதிகரிக்கும். தடைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

அவிட்டம் : லாபம் அதிகரிக்கும்.
---------------------------------------


கும்பம்
மார்ச் 22, 2022


மூத்த உடன்பிறப்புகளின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். நன்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

சதயம் : புரிதல் உண்டாகும்.

பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------

மீனம்
மார்ச் 22, 2022


வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். தாழ்வு மனப்பான்மையான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வாகன பயணங்களில் வேகத்தை விட விவேகம் அவசியம். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

பூரட்டாதி : கவனம் வேண்டும்.

உத்திரட்டாதி : நெருக்கடியான நாள்.

ரேவதி : விவேகம் வேண்டும்.

 

Tags :

Share via