"முட்டாள் என விமர்சிப்பதா... ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை"பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
திமுக எம்பி ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடிந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் அமித்ஷா ஒரு முட்டாள் என ஆ.ராசா பேசியதை சுட்டிக்காட்டிய அவர், "நாட்டின் பாதுகாப்பை கட்டிக்காக்கும் உள்துறை அமைச்சரை விமர்சிக்க ஆ.ராசாவுக்கு தகுதியில்லை. மக்கள் பிரதிநிதியான ஆ.ராசா, அமித்ஷாவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணவப் பேச்சு பேசும் நீங்கள் 2026 தேர்தலுக்குப் பின் துரத்தப்படுவது உறுதி" என சாடியுள்ளார்.
Tags :



















