மொராக்கோ நிலநடுக்கம்: பிரதமர் மோடி இரங்கல்
மொராக்கோ நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 296 பேர் வரை உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. மக்கள் சாலைகளில் திரண்டு நிர்கதியாக தவிக்கின்றனர். இது குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் மோடி, மொராக்கோவில் நிலநடுக்கம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Tags :