விஷம் குடித்து உயிர் தப்பிய நிலையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி முஸ் லிம் தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி தீபிகா (வயது 23). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆனது. குழந்தைகள் இல்லாத நிலையில், சுரேசுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், மனைவிக்கும், அவருக்கும் இடையே தக ராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட தீபிகா, நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்தை குடித்து விட்டார்.இதையறிந்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு இதனை கண்ட உறவினர்கள் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலை யில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தனியாக இருந்த தீபிகா. தனது படுக்கை அறையில் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடித்து உயிர் தப்பிய நிலையில் தூக்குப்போட்டு இறந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக டர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி றார்.
Tags :