காவலாளி கொலையில் நண்பர் சிக்குகிறார் 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை.

by Staff / 18-12-2022 02:55:26pm
காவலாளி கொலையில் நண்பர் சிக்குகிறார் 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை.

நாகர்கோவில் கணேசபுரம் என். வி. கே. தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர், தனியார் நிறுவ னத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராதா (42). இவர்களுக்கு அனுஸ்ரீ, சுபஸ்ரீ என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 15-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் வீடு திரும்பவில்லை. இதை யடுத்து ராதா கோட்டார் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் முருகன் சொத்த விளை பகுதியில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கிடைத் தது. டி. எஸ். பி. ராஜா, இன்ஸ் பெக்டர் சாய்லட்சுமி, சப்-இன்ஸ்பெக் டர்கள் ராபர்ட் செல்வசிங், ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார்கள். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிய நாய் யாரை யும் கவ்வி பிடிக்க வில்லை. இதையடுத்து போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக முருகனின் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது முரு கனை வீட்டில் இருந்து அவரது நண்பர் ஒருவர் அழைத்து சென்றதாக கூறி னார். எனவே அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்த வர்? என்பது குறித்து விசா ரணை நடத்தப்பட்டது. விசாரணையில் முருகனை அழைத்துச் சென்றவர் நாகர்கோவில் பீச் ரோடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். போலீ சார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார்.எனவே இந்த கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி. சி. டி. வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் முருகனின் மோட்டார் சைக்கிள் மாயமானது குறித் தும் விசாரணை நடத்தி னார்கள். அப்போது வடசேரி பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டி ருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்று மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். முருகனை கொலை செய்துவிட்டு அவரது நண்பர் மோட்டார் சைக் கிளை பஸ் நிலை யத்தில் நிறுத்திவிட்டு வெளி யூருக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீ சார் கருதுகிறார்கள்.கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது தலைமறைவாகியுள்ள பீச் ரோட்டை சேர்ந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்டு இருந்ததும் அந்த மோட்டார் சைக்கிள் மாயமான பிரச்சனையில் முருகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல் கிடைத்தது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பகுதியில் உள்ள சாலை துண்டிக்கப்பட்ட சாலை ஆகும் இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாது. முருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பகுதியில் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே அவரை வெளியே எங்காவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஒரு நபர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை வேறு சிலருக்கும் தொடர்பு இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தலைமறைவாகியுள்ள முருகனின் நண்பரைப் பிடித் தால் தான் கொலைக் கான முழு விவரமும் தெரிய வரும்.

 

Tags :

Share via