பரோட்டா சாப்பிட்ட மகன் பலி........தாய்க்கு சிகிச்சை

திருப்பத்தூர் அடுத்த சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (25). கடந்த 1ஆம் தேதி, பாலாஜி மற்றும் அவரது தாயார் ராஜேஸ்வரி (45) ஆகியோர், பரோட்டா பார்சல் வாங்கிவந்து வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் இருவருக்கும், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், பாலாஜி உயிரிழந்தார். அவரது தாயாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
Tags :