பேருந்து கண்ணாடியை உடைத்து அட்டூழியம்

by Staff / 17-11-2022 11:03:42am
பேருந்து கண்ணாடியை உடைத்து அட்டூழியம்

சென்னை மாநகரம், கோயம்பேடு பகுதியிலிருந்து முல்லை நகர் நோக்கி, இன்று அதிகாலை 46 ஜி என்ற மாநகர அரசுப் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்து புளியந்தோப்பு பி.எஸ்.மூர்த்தி நகர் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, பேருந்தை வழிமறித்து எதிரே வந்த 3 இளைஞர்கள் கம்பிகளால் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து விட்டுத் தப்பி ஓடினர். இதுக்குறித்து தகவலறிந்த போலீசார், இந்த இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via