சீமானுக்கு நான் ஆதரவாக பேசுவேன் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை.
பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "பெரியார் குறித்து அண்ணன் சீமான் பேசியதற்கான ஆதாரங்களை நான் வெளியிடுகிறேன். சீமான் கூறியதை பெரியார் எப்போது எங்கு பேசினார் என்று ஆதாரங்களை இன்று மாலை நான் வெளியிடுகிறேன். பெரியார் பேசியதை பொதுவெளியில் கூறினால் நாகரீகமாக இருக்காது" என்று பேட்டியளித்துள்ளார்.சீமானின் பேச்சுக்கு ஆதரவாக அண்ணாமலை பேசியது அரசியல் காலத்தில் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது..
Tags : சீமானுக்கு நான் ஆதரவாக பேசுவேன் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை