டெல்லி தீ விபத்து.. 2 பேர் பலி.. 4 பேர் காயம்

by Staff / 18-10-2024 12:06:17pm
டெல்லி தீ விபத்து.. 2 பேர் பலி.. 4 பேர் காயம்

டெல்லியில் உள்ள போலாநாத் நகரில் குடியிருப்பு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இதற்கிடையே அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், காயமடைந்த மற்றும் உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via