தமிழக சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே கிங்கு மற்றவர்கள் எல்லாம் மங்கு என செய்தியாளர்கள் பேட்டியில் திமுகவை விளாசிய கே.டி ராஜேந்திர பாலாஜியால் சிரிப்பலை ஏற்பட்டது

தென்காசி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக இருந்து வரக்கூடிய சூழலில் இதுகுறித்து செங்கோட்டை நகர் பகுதியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பேன். கே டி ராஜேந்தர பாலாஜி கூறுகையில், தொடர்ந்து கனிம வளங்கள் கடத்தப்பட்டால் பொதுமக்கள் துணையோடு லாரிகள் சிறைபிடிக்கப்பட்டு அவைகள் உடைக்கப்படும் என கடுமையாக கூறினார்.மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சந்திப்பதற்கு திமுக அச்சத்தில் உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட ஆட்கள் இல்லாத சூழல் ஏற்படக்கூடும்.
அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு எனவும் சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை ஸ்டாலினா? எடப்பாடி பழனிச்சாமி? என்ற போட்டியை உள்ளது. இந்த போட்டியில் எடப்பாடி பழனிச்சாமியை கிங்கு எனவும் மற்றவர்கள் எல்லாம் மங்கு எனவும் கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
Tags :