நெட்வொர்க் கவரேஜ் வரைபடங்களை இணையதளங்களில் வெளியிட ஆணை
இந்திய தொலைதொடர்பு சேவையை மேம்படுத்தும் நோக்கில் தொலைவு ஒழுங்கு முறை ஆணையம் ட்ராய் ஏர்டெல், வோடாபோன், ஜியோ, ஐடியா, பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட தொலைதொடர்பு இயக்குனர்களுக்கு விரிவான நெட்வொர்க் கவரேஜ் வரைபடங்களை தங்கள் இணையதளங்களில் வெளியிட ஆணை இட்டுள்ளது. இதன் மூலம் தரம் மேம்படும் என்றும் மொபைல் பயன்படுத்தும் பயனாளர்களின் தொலை தொடர்புகளை தேர்ந்தெடுக்கும் தகவல் மற்றும் இன்னொரு நெட்வொர்க்கிற்கு மாறும் பொழுதும் பயனாளர்களுக்கு முடிவுகளை எடுக்க வழிவகை செய்கிறது. இதன் மூலம் 2g, 3g ,4g மற்றும் 5g நெட்வொர்க் கவரேஜ்கள் இயங்கும் புவியியல் வரைபடங்களை பயனர்களுக்கு தங்கள் பகுதியில் எந்த இயக்குனர்கள் சிறந்த இணைப்பை வழங்குகிறார்கள் என்பதை மதிப்பீடு செய்வதற்கு வழிவகுக்கும் .புதிய சிம் கார்டை தேர்ந்தெடுக்கும் செயல்முறையைஎளிதாக்குதோடு சேவை வழங்குவதில் =வேறு ஒரு நெட்வொர் க்கு மாறுவதற்கு ஆன சேவையில் தெளிவை ஏற்படுத்தும். இதன் மூலம் விரிவான கவரேஜ் நெட்வொர்க் செயல்திறன் பற்றிய அறிவு பயனர்களுக்கு கிடைக்கும். டிராயிங் இந்த உத்தரவு வெளிப்படைத்தன்மையை உருவாக்கும்.தங்கள் சேவையை வழங்கும் நெட்வொர்க்கின் நம்பகத் தன்மையை பயனர்கள் தெரிந்து கொள்வதற்காக ட்ராய் இதை வலியுறுத்துவதாக எடுத்துக் கொள்ளலாம். 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி நெட்வொர்க்குகளுக்கு சார்ந்த வரைபடங்களை வயர்லெஸ் குரல் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் பிராட்பேண்ட் கிடைக்கும் தகவல்களையும் இது அறிவதற்கு வாய்ப்பளிக்கும்.
Tags :