சர்க்கஸ் பயிற்சியாளரை தாக்கிய கரடி

by Staff / 16-07-2023 02:06:10pm
சர்க்கஸ் பயிற்சியாளரை தாக்கிய கரடி

ரஷ்யாவில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் பயிற்சியாளரை கரடி கொடூரமாக தாக்கியது. பார்வையாளர்கள் முன்னிலையில் அக்ரோபாட்டிக்ஸ் செய்து கொண்டிருந்தபோது, ​​கரடி திடீரென பாய்ந்து பயிற்சியாளரைத் தாக்கியது. அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல ஓட்டம் பிடித்தனர். அங்கிருந்த ஊழியர்கள் உதவியுடன் கரடியை மீட்டு காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரஷ்யாவில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு மிருகம் பயிற்சியாளரை தாக்குவது வழக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via