லாரி மீது அரசு பஸ் மோதி நடத்துனர் சம்பவ இடத்தில் நசுங்கி பலியானார் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் 11  பேர்  படுகாயம் .

by Editor / 09-04-2024 10:46:10am
லாரி மீது அரசு பஸ் மோதி நடத்துனர் சம்பவ இடத்தில் நசுங்கி பலியானார் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் 11  பேர்  படுகாயம் .

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சம்பட்டி பகுதியில் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 5 மணி அளவில் திருப்பூரில் இருந்து செங்கோட்டை நோக்கி விரைந்து வந்த அரசு பஸ் இந்த பஸ்ஸை சுந்தரபாண்டிய புரத்தைச் சேர்ந்த விசா கணேசன் என்பவர் ஓட்டிட்டு வந்தார் அதிகாலை நேரத்தில்

 ஆந்திராவில் இருந்து சுண்டல் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு நோக்கி சென்று கொண்டிருந்த லாரி  கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் பஞ்சர் ஆகி   தென்காசி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நின்றது காலை ஐந்து முப்பது மணி  அளவில் திருப்பூர் இருந்து செங்கோட்டைக்கு 16 பயணிகளுடன் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக  சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரியின் மீது பயங்கர சத்தத்துடன்  மோதியது பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியில் தூக்கி வீசப்பட்டனர் இதில் முன் இருக்கையில் இருந்த நடத்துனர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலே பலியானார் மற்றும் டிரைவர் பஸ்ஸில் பயணம் செய்த 11 பேர்கள் படுகாயம் அடைந்தனர் தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்து காயப்பட்டவர்களை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தற்போது காயம் அடைந்த 11 நபர்களுக்கும் கடையநல்லூரில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அரசு பேருந்து நடத்துறாரான பாலசுப்பிரமணியன் செங்கோட்டை மேலூர் சேர்ந்தவராவார் இவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளது டிரைவரின் கவனக் குறைவு விபத்துக்கு காரணம் என பஸ்ஸில் பயணம் செய்த காயம் அடைந்த சாந்தி தெரிவித்தார் பஸ் லாரியின் மீது மோதியது இதில் பஸ்ஸின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.விபத்து நடந்த சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 

Tags : விபத்து நடந்த சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Share via