கரும்பு சாகுபடி பாதிப்பு: நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தல்

by Staff / 09-09-2023 03:09:44pm
கரும்பு சாகுபடி பாதிப்பு: நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தல்


மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் மற்றும் காட்டுப் பன்றி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கிடுமாறு தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழகத்தில் கரும்பு சாகுபடிக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் முன்னனியில் உள்ள மாவட்டங்களாகும். எனவேதான், இப்பகுதியில் சர்க்கரை ஆலைகள் அதிகம் உள்ளன. ஆனால், தொடர்ந்து விவசாயிகள் பாடுபட்டு சாகுபடி செய்த கரும்புக்கு போதிய விலை கிடைக்காத நிலைமை, பல சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை நிலுவையில் வைத்துள்ளதால், கரும்பு பயிரிட்டு பெரும் நஷ்டத்திற்குள்ளான பல விவசாயிகள், கரும்பு சாகுபடியை மெல்ல மெல்லக் குறைத்து, நெல், மக்காச் சோளம் போன்ற மாற்றுப் பயிர்களுக்கு மாறியும், தேக்கு மரங்களை வளர்த்தும் வருகின்றனர்.

 

Tags :

Share via