சகோதரருக்கு ‘கிட்னி’யை தானமாக வழங்கிய பெண் டாக்டர்
சிறுநீரகத்தால் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு பெண் டாக்டர் ஒருவர் கிட்னியை தானமாக வழங்கியுள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெண் சுஜாதா தேவ். இவரது சகோதரர் சந்தீப்குமார். இவர் ஐ.ஆர்.எஸ். அதிகாரி. லக்னோவில் வருமான வரி கமிஷனராக பணியாற்றி வருகிறார்.
சந்தீப்குமாருக்கு சிறுநீரக (கிட்னி) பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
சந்தீப்குமாருக்கு அவரது சகோதரி சுஜாதாதேவ் தனது ஒரு கிட்னியை தானமாக வழங்க முடிவு செய்தார். இதையடுத்து குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆபரேசன் நடந்தது. இதில் சந்தீப் குமாருக்கு வெற்றிகரமாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அவர் உடல்நலம் தேறிவருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சுஜாதா தேவ்- சந்தீப்குமார்
இது தொடர்பாக சந்தீப்குமார் கூறும்போது, “எனது சகோதரிக்கு நான் நன்றி சொன்னால் அதுபோதுமானதாக இருக்காது. வழக்கமாக சகோதர்கள்தான் சகோதரிகளுக்கு ரக்ஷா பந்தன் விழாவில் பரிசுகள் வழங்குவார்கள்.
ஆனால் சுஜாதா தேவ் அவரது கிட்னியை தானமாக வழங்கி எனக்கு வாழ்க்கையை பரிசாக வழங்கி உள்ளார்” என்றார்.
Tags :