அ. தி. மு. க. நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டம்

by Staff / 09-09-2023 03:06:54pm
அ. தி. மு. க. நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகர் மாவட்ட அ. தி. மு. க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக பொதுச் செயலாளரு, முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் படி, மதுரை மாநகர் மாவட்ட அ. தி. மு. க. சார்பில் வருகிற பாராளு மன்ற தேர்தல் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மற்றும் மகளிர் குழு, இளைஞர் குழு அமைத்தல், கட்சி வளர்ச்சி பணி, பேரறிஞர் அண்ணா வின் பிறந்தநாள் பொதுக் கூட்டங்களை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அ. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை பனகல் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடை பெறுகிறது.இந்த கூட்டத்தில் கட்சி யின் வளர்ச்சி பணிகள் மற்றும் பூத் கமிட்டி, மகளிர் குழு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விரிவாக ஆலோசனைகள் வழங்கப் பட உள்ளன.எனவே இந்த ஆலோ சனை கூட்டத்தில் இந்நாள், முன்னாள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள், மாவட்ட நிர்வாகி கள், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி மற்றும் கூட்டு றவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories