நாம் பேசினால் ஒலியின் வேகம் என்னவாக இருக்கும்

by Staff / 25-03-2022 12:14:17pm
 நாம் பேசினால் ஒலியின் வேகம் என்னவாக இருக்கும்

செவ்வாய் கிரகத்தில் நாம் பேச கூடிய ஒலியின் வேகம் பற்றிய தகவலை பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம், விஞ்ஞானிகளுக்கு தெரிவித்துள்ளது. நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 30ந்தேதி விண்கலம் ஒன்றை அனுப்பினர். 

 இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. நாசா அனுப்பிய இந்த விண்கலம் 7 மாத பயணங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்த நிலையில், விண்கலத்தில் இருந்து பெர்சவரன்ஸ் ரோவர், கடந்த வருடம் இதே நாளன்று ஜெசிரோ பள்ளத்தில் தரையிறங்கியது.

இந்த ரோவரானது செவ்வாய் கிரகத்தில் பல தகவல்களையும், அரிய புகைப்படங்களையும் சேகரித்து பூமிக்கு அனுப்பி வருகிறது.  இதில், சிவப்பு கிரகம் எனப்படும் செவ்வாய் கிரகத்தில் ஒலியின் வேகம் பற்றிய விவரங்களை விஞ்ஞானிகளுக்கு இந்த பெர்சவரன்ஸ் ரோவர் தெரிவித்து உள்ளது.
 
இந்த ரோவரில் இருந்து ஒலி அலைகள் வெளியேறி சென்று, பின்பு ரோவரின் மைக்ரோபோனுக்கு திரும்பி வரும் கால அளவு ஆய்வாளர்களால் கணக்கிடப்பட்டது. இந்த ஆய்வில், செவ்வாயில் ஒலியானது ஒரு வினாடிக்கு 240 மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்வது தெரிய வந்தது. 

செவ்வாயில் வெப்பநிலைக்கு ஏற்ப விரைவான மாற்றங்கள் ஏற்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  இதற்காக ஒவ்வொரு முறையும் ரோவரில் இருந்து ஒலி அலைகளை வெளியேற செய்து அதன் வேகம் அளவிடப்பட்டுள்ளது.  

 

Tags :

Share via