ரத்த சோகை அறிகுறி - தடுக்கும் வழிமுறை...

by Admin / 11-03-2022 12:36:44pm
ரத்த சோகை அறிகுறி  - தடுக்கும் வழிமுறை...

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் ரத்தசோகை நோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

ரத்த சோகை அறிகுறிகளும் தடுக்கும் வழிமுறைகளும்...

உலக அளவில் 800 மில்லியனுக்கும் அதிகமான பெண்களை ரத்தசோகை நோய் பாதிக்கிறது என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இந்தியாவில், இது ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில், திருமண வயதுடைய பெண்களில் ஐம்பத்தி இரண்டு சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த சோகைக்கான முதன்மை காரணம் இரும்புச்சத்து குறைபாடு.

ரத்த சோகை அறிகுறிகள்:

 
மிகுந்த சோர்வு, பலவீனம், வெளிறிய தோல், மார்பு வலி, வேகமான இதயத்துடிப்பு அல்லது மூச்சுத் திணறல், தலைவலி, தலைசுற்றல், கை கால்களில் சில்லென்ற உணர்வு, நாக்கில் புண் அல்லது வீக்கம், பலமற்ற உடையக்கூடிய நகங்கள், பசியற்ற உணர்வு. இதுபோன்ற பிரச்சனைகளில் ஏதாவது ஒன்று இருந்தாலும் உடனடியாக டாக்டரிடம் சென்று அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வதுடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தடுக்கும் வழிமுறைகள்:

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் ரத்தசோகை நோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும். இறைச்சி, கடல் உணவு, பீன்ஸ், அடர் பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகள் கீரைகள், திராட்சை மற்றும் ஆப்ரிகாட் போன்ற உலர்ந்த பழங்கள், இரும்பு செறிவூட்டப்பட்ட தானியங்கள். உங்கள் உடல் மற்ற மூலங்களிலிருந்து பெறுவதைவிட இறைச்சியிலிருந்து அதிக அளவு இரும்புச்சத்தை உறிஞ்சுகிறது.

நீங்கள் இறைச்சி சாப்பிடாதவராக இருக்கும்பட்சத்தில் தாவர அடிப்படையிலான உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டியிருக்கும். ஆரஞ்சு பழச்சாறு போன்ற சிட்ரஸ் பழச்சாறுகளில் உள்ள வைட்டமின் சி, உணவில் உள்ள இரும்புச்சத்தை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உங்கள் உடலுக்கு உதவுகிறது. ப்ராக்கோலி, திராட்சைப்பழம், கிவி, கீரைகள், முலாம் பழங்கள், ஆரஞ்சு, மிளகு, ஸ்ட்ராபெரி மற்றும் தக்காளியில் வைட்டமின் ‘சி’ ஆனது காணப்படுகின்றது.

 

Tags :

Share via