இம்ரான்கானை கைதுசெய்து தேர்தல் ஆணையம் முன்பு ஆஜர் செய்ய உத்தரவு.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை அவதூறாக பேசிய காரணத்தினால் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் இம்ரான் கான் ஆஜராகவில்லை. இந்த நிலையில், இம்ரான் கானை கைது செய்து தேர்தல் ஆணையத்தின் முன் இன்று ஆஜர்படுத்துமாறு இஸ்லாமாபாத் போலீஸ் ஐ.ஜி.க்கு தேர்தல் ஆணையம் ஜூலை 24 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளால் இம்ரான் கான் மே மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சில நாட்களில் ஜாமீனில் அவர் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















