ராணுவ தளபதியுடன் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொக்சின் நக்வி டெக்ரானுக்கு சென்றுள்ளார்.

by Admin / 16-04-2026 10:32:41am
ராணுவ தளபதியுடன் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொக்சின் நக்வி  டெக்ரானுக்கு சென்றுள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்க இடையிலான மோதலை தீர்க்கும் முயற்சியாக நேற்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆஸிம் முனீர் டெக்ரானுக்கு சென்றுள்ளார். அமெரிக்க மற்றும் ஈரான் இடையே முடங்கியுள்ள அமைதி பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்குவதே இந்த பயணத்தின் நோக்கமாக சொல்லப்படுகிறது. ராணுவ தளபதியுடன் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொக்சின் நக்வி மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். டெக்ரானில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி  பேச்சுவார்த்தை குழுவை வரவேற்று பேசி வருகிறார் .கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எட்டப்படாமல் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. மத்திய அஷ்ட முயற்சியில் அணுசக்தி திட்டம் மற்றும் ஹார்முஸ் நீரிணை வணக்கம் போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

 

Tags :

Share via
Logo