இன்று பாராளுமன்றத்தில் மகளிர்-தொகுதி மறுவையறை மசோதா தாக்கல்

by Admin / 16-04-2026 10:43:10am
இன்று பாராளுமன்றத்தில் மகளிர்-தொகுதி மறுவையறை மசோதா தாக்கல்

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யும் மற்றும் தொகுதி மறு வரையறை தொடர்பான முக்கிய மசோதாக்கள் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன. இதற்காக ஏப்ரல் 16 முதல் 18 வரை மூன்று நாட்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 2026 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பு ( 131 வது திருத்தம்) மசோதா தொகுதி மறு வரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் மசோதா ஆகிய மூன்று முக்கிய மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன 2029 ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்துவதை இந்த மசோதா குறிக்கோளாக கொண்டுள்ளது தொகுதி மறுவறையின் மூலம் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதைய 543 இல் இருந்து 815 அல்லது 850 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த தொகுதி மறு வரையறை மேற்கொள்ளப்பட உள்ளது தென் மாநிலங்களின் அரசியல் பலத்தை இது குறைக்கும் எனக் கூறி திமுக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.சமாஜ்வாதிகட்சி எதிர்ப்புதொிவித்துள்ளது.கனிமொழிகருணாநிதி நோட்டிஸ்வழங்கியுள்ளதாக தகவல்.

 

Tags :

Share via
Logo