பெண் வயிற்றில் கத்திரிக்கோல்... மருத்துவர்கள் அதிர்ச்சி

by Staff / 10-10-2022 04:07:08pm
பெண் வயிற்றில் கத்திரிக்கோல்... மருத்துவர்கள் அதிர்ச்சி

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஹர்சீனா (30). இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவரது, வயிற்றில் கத்திரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 12 செ.மீட்டர் நீளமுள்ள கத்தரிக்கோல் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக கத்திரிக்கோலை வயிற்றில் சுமந்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo