பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 4-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.

by Editor / 07-06-2021 11:07:12am
பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 4-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் போட்டியில் கஸகஸ்தானைச் சேர்ந்த எலீனா, 6-3, 7-5 என நேர் செட்களில் செரீனாவைத் தோற்கடித்து காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் காலிறுதிக்கு எலீனா தகுதி பெற்றுள்ளார்.

இந்தத் தோல்வியினால் செரீனாவின் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான காத்திருப்பு மீண்டும் தொடர்கிறது. இதுவரை 23 பட்டங்களை வென்றுள்ள செரீனா, இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார். ஆனால் அந்த ஒரு பட்டத்துக்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்.

கடைசி நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளிலும் தோற்றுள்ளார் செரீனா. கடந்த வருடம் நடைபெற்ற யு.எஸ். ஓபன் போட்டியில் அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்தார். காயத்தால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் முதல் சுற்றுக்குப் பிறகு வெளியேறினார். 2021 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் ஒசாகா, செரீனா வில்லியம்ஸை அரையிறுதியில் வீழ்த்தினார். இப்போது பிரெஞ்சு ஓபன் போட்டியில் 4-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.

 

Tags :

Share via