அன்றைய எமர்ஜென்சியும், இன்றைய நிலையும் - லாலு கருத்து

“எமர்ஜென்சியில் இந்திரா காந்தி எங்களில் பலரை சிறையில் தள்ளியிருக்கலாம். ஆனால், அவர் எங்களை துன்புறுத்தவில்லை. மிசாவில் நான் 15 மாதங்கள் சிறையில் இருந்தேன். அப்போது அங்கே மோடி, நட்டா, அவர்களின் அமைச்சரவையின் இன்னும் சில சகாக்களை பார்த்தது இல்லை. 1975-ல் அமல்படுத்தப்பட்ட
எமர்ஜென்சி நம் நாட்டு ஜனநாயகத்தின் மீதான களங்கம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் கூட 2024-ல் எதிர்க்கட்சியை மதிக்காத அரசை நாம் மறந்துவிடக் கூடாது.” என்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
Tags :