பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

by Editor / 07-06-2021 11:04:22am
பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்ங பலர் காயம் அடைந்துள்ளதாக கோட்கி மாவட்டத்தின் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் சர் சையது விரைவு ரயிலும், மில்லத் விரைவு ரயிலும் இன்று காலை நேருக்கு நேர் மோதியது.
தடம் புரண்டதற்கும் அடுத்தடுத்த மோதலுக்கும் என்ன காரணம் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவின,ர் மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்த 30 பேரின் குடும்பத்திற்கு அந்நாட்டின் அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories