ஜனநாயகன் படத்தை உள்ளூர்த்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தவர் கைது
கோவை கருமத்தம்பட்டி சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ராசி பிரைம் மூவி என்ற உள்ளூர் சேனலை நடத்தி வருகிறார். இவர் கடந்த 11. 04. 2026 அன்று மத்திய தணிக்கை வாரியம் சான்று பெறாமல் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியான நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை ஒளிபரப்பு செய்துள்ளார். இதுகுறித்து கோவை புறநகர் கிழக்கு தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் மோகனப்பிரியா கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். இந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இணையதளத்தில் சட்ட விரோதமாக பகிர்வப்பட்ட பட லிங்கை இவர் தமது உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தது கண்டறியப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவர் ஒளிபரப்பிற்கு பயன்படுத்திய கணினி மற்றும் ஐந்து ஹார்ட் டிஸ்க் என்று அழைக்கப்படும் சேமிப்பக கருவிகள் உள்ளிட்டவற்றை காவல்துறை பறிமுதல் செய்து அவருடைய அலுவலகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
Tags :


















