மனிதர்களை அழிக்கும் கொடிய நோய் கரூரில் இருந்து கோவை தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட வந்து உள்ளது-அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 16-04-2026 02:43:04pm
 மனிதர்களை அழிக்கும் கொடிய நோய் கரூரில் இருந்து கோவை தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட வந்து உள்ளது-அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை காந்திபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது கோவை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சனம் செய்தார். 2019- 20 காற்றில் பரவிய ஒரு கொடிய நோய் கொரோனா அந்த கொடிய நோயை கூட கட்டுப்படுத்தி விடுவதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஆனால், அதைவிட மிகக் கொடூரமாக பரவி மனிதர்களை அழிக்கும் கொடிய நோய் கரூரில் இருந்து கோவை தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட வந்து உள்ளது.. அவரிடம் நீங்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நான் கரூரில் பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்து ஓடச் செய்வேன் என்று சொன்னவர் அங்கு அதை எல்லாம் செய்துவிட்டு இப்பொழுது எங்கு வந்து உங்களை ஏமாற்ற வந்திருக்கிறார். நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் உங்களை ஏமாற்றி விடுவார். அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது செய்த வரை மூலையில் எல்லாம் இன்றைக்கு அவரை நான் கோடு கிழித்தால் ரோடு போடுபவர் என்றும் கோவையின் கிங்கு மேக்கராக இருப்பவர் என்றும் முதலமைச்சரால் புகழப்படக்கூடிய செந்தில் பாலாஜி பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் அத்தனை வழக்குகளும் திரும்ப தோண்டி எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனையை அனுபவிப்பார்கள் என்று தெரிவித்தார் .

 

Tags :

Share via

More stories

Logo