திமுக நகராட்சி கவுன்சிலர் ரஞ்சித் குமார் நடுகோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்
திருச்சி அருகே திமுக நகராட்சி கவுன்சிலர் ரஞ்சித் குமார் நடுகோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்து உள்ளது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி என்று அவர் ஆவேசமாக தெரிவித்தார். ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது காட்டுகிறது .திமுக கவுன்சிலருக்கே இந்த நிலைஎன அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளா ர். குற்றங்கள்.அதிகரித்து வருவதாகவும் இதனை தடுக்க காவல்துறை தவறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக அரசு தனது கடமை இருந்து தவறிவிட்டதாகவும் கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Tags :



















