தெலுங்கானாவில் பெற்றோரை பராமரிக்க தவறும் பிள்ளைகளுக்கு தண்டனை வழங்கும் புதிய மசோதா
தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பெற்றோரை பராமரிக்க தவறும் பிள்ளைகளுக்கு தண்டனை வழங்கும் புதிய மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளார். தெலுங்கானா ஊழியர்கள் பொறுப்புக்குழுகள் மற்றும் பெற்றோர் ஆதரவு கண்காணிப்பு மசோதா 2026 என்ற பெயரில் இந்த மசோதா நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது. பெற்றோரை முறையாக கவனிக்காத பிள்ளைகளின் மாத சம்பளத்தில் 15 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 10,000 நேரடியாக பிக்கப்படும் .இந்த சட்டம் அரசு ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் எம்எல்ஏ, எம்பி போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும். பிடிக்கப்படும் தொகை சம்பந்தப்பட்ட பெற்றோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பாதிக்கப்பட்ட பெற்றோர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அமைப்பிடம் புகார் அளிக்கலாம் ..மேல்முறையீடு செய்ய முதியோர் ஆணையம் அமைக்கப்படும். முதியவர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யவும் சமூகப் பொறுப்பை வலியுறுத்தவும் இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்..
Tags :

















