மனுவை வாபஸ் பெற்ற ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவு இடத்தில் முழு உருவ சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில், அவருக்கு முழு உருவ சிலை வைக்க அனுமதிக்க கோரி மனைவி பொற்கொடி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். தற்போது மாவட்ட ஆட்சியர் சிலை வைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மனுவை பொற்கொடி வாபஸ் பெற்றார்.
Tags :



















