காதலியை திருமணம் செய்த இரவே புதுமாப்பிள்ளை தற்கொலை

கர்நாடக மாநிலம் கோலாா் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் பாபு (33). இவர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவருடன் பணியாற்றி வந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்ட நிலையில், ஹரீஷ் அப்பெண்ணுடன் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில், தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என காதலி கூறிய நிலையில் வீட்டாரின் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த அன்று இரவு தான் பணியாற்றும் மருத்துவமனைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Tags :