சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கார் கவிழ்ந்து விபத்து

by Editor / 24-04-2021 01:29:51pm
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கார் கவிழ்ந்து விபத்து

காளையார்கோவில் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, அதன்பின்னர், காரைக்குடிக்குச் சென்று கொண்டிருந்தார். காளையார்கோவில் அருகே காளக்கண்மாய் பகுதி சாலையில் சென்றுகொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை மீட்ட போலீஸார் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக ஆட்சியர் உயிர் தப்பித்தார்.

Tags :

Share via

More stories