பாகிஸ்தானில் தொடர் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் பாதிப்பு

by Editor / 03-07-2022 02:00:53pm
பாகிஸ்தானில் தொடர் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் பாதிப்பு


பாகிஸ்தானில் தொடர் எரிபொருள் விலை உயர்வால் குடிமக்கள் வாகன பயன்பாட்டை குறைத்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் ஷெபாஸ் அரசு பெட்ரோல் விலையை நேற்று மீண்டும் உயர்த்தியது. இதன்படி, பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.14.84 விலை உயர்ந்தது. இது ஒரு மாதத்தில் 4வது முறையாகும்.இதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு அந்நாட்டு பண மதிப்பின்படி, ரூ.248.74 ஆக உள்ளது. இதனை பாகிஸ்தானிய நிதி அமைச்சகம் அறிவித்தது.
இதேபோன்று, அதிவிரைவு டீசல் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.13.23 உயர்ந்து அந்நாட்டு பண மதிப்பின்படி, ரூ.276.54 ஆக உள்ளது. மண்ணெண்ணெய் ரூ.18.83 விலை உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via