வானதி ஶ்ரீனிவாசன் கண்டனம்

by Editor / 19-11-2023 07:54:55pm
வானதி ஶ்ரீனிவாசன் கண்டனம்

நடிகை த்ரிஷா குறித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்புக்கள் வலுத்துவருகின்றன.இதன் தொடர்ச்சியாக பாஜக எம்எல்ஏ வானதி ஶ்ரீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து X தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நடிகை த்ரிஷா குறித்து பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். சுயவிளம்பரத்திற்காக இது போன்று செயல்படும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறேன். நடிகை திரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பதிவிட்டுள்ளார். சினிமா பிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Tags : வானதி ஶ்ரீனிவாசன் கண்டனம்

Share via

More stories