போலீஸ் சீருடைக்குள் மறைந்திருந்த நாகப்பாம்பு பிடிபட்டது.
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ராவில் உள்ள பஹ்லேஜா காவல் நிலையத்தில் சுவரில் தொங்கிய போலீஸ் சீருடையின் பின்னால் பாம்பு பதுங்கி இருந்தது. பெண் காவலர் ஒருவர் தனது சீருடையினை எடுக்க சென்ற பொது ஆடையின் மேல் மேல் நாகப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். இதனைத்தொடர்ந்து மற்ற காவலர்கள் விரைந்து வந்து அவரை பாதுகாப்பாக மீட்டனர்.நூழிலையில் அவர் உயிர் தப்பியதாக நிலையத்தின் மற்ற அதிகாரிகள் தெரிவித்தனர். போலீஸ் ஸ்டேஷனுக்குள் ஊர்ந்து செல்லும் நாகப்பாம்பு, சீருடையின் பின்னால் வாலை விரித்தபடி இருக்கும் படமும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Tags : A cobra hiding inside a police uniform was caught.